/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி மழை நின்ற பின்னர் துவக்கம்
/
பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி மழை நின்ற பின்னர் துவக்கம்
பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி மழை நின்ற பின்னர் துவக்கம்
பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி மழை நின்ற பின்னர் துவக்கம்
ADDED : அக் 23, 2025 01:36 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வந்தாலும், கடந்த ஒரு வாரமாக கனமழை, பல இடங்களில் வெள்ளமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அந்தியூர், பவானி, கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய தாலுகாக்களில் மழை, வெள்ளத்தால் சாலை, பாலங்கள், தரைப்பாலம் போன்றவை பாதித்துள்ளன. அங்கு ஏற்பட்ட உடைப்பால், விளை நிலங்கள், நகர, கிராமப்பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து நெல் கொள்முதல் நிலையம், குடோன் போன்றவைகளும் பாதித்துள்ளன.
இதுபற்றி, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தமிழகம் முழுவதிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நின்று, வெள்ளம் அல்லது மழை நீர் வடிந்த பின்னர்தான் பயிர் சேதத்தின் அளவை கணக்கிட முடியும். அதற்கு முன்பாக கணக்கிட இயலாது. எனவே ஈரோடு மாவட்டத்துக்கு அரசு உத்தரவு வந்த பின்னரே, கணக்கெடுப்பு பணி துவங்கும்.
இருப்பினும், அந்தந்த பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள் தலைமையில், எந்தெந்த பகுதியில் உள்ள பயிர்கள், நிரந்தர பயிர்கள் பாதித்துள்ளன என்பதை அளவீடு இன்றி, பகுதி விபரங்களை சேகரித்து வருகிறோம். சில இடங்களில் விவசாயிகள் தரும் தகவலின் அடிப்படையிலும், அவ்விடத்தை பார்வையிட்டு, விபரம் சேகரிக்கிறோம்.
அரசு உத்தரவிட்டதும், முழு அளவில் பயிர் சேதத்தை கணக்கீடு செய்து, அரசுக்கு அறிக்கையாக மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்குவோம். இவ்வாறு கூறினர்.