ADDED : அக் 10, 2026 06:16 AM

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகரை அடுத்த கரிதொட்டம்பாளையம், அம்மாபாளையம், கோடேபாளையம், தொப்பம்பாளையம், நால்ரோடு உள்ளிட்ட கிராமங்கள் விளாமுண்டி வனபகுதியை
ஒட்டியுள்ளது.
இங்குள்ள விவசாய நிலங்களில் வாழை மற்றும் தென்னை
மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடும் வறட்சியால்
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களில்
புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கிறது. தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி மற்றும் தண்ணீர் குழாய்களை சேதப்படுத்துவதால் விவசாயி
கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
யானைகளால்
விவசாய பயிர்கள் அதிகம் சேதமாகின்றன. வனத்துறை சார்பில்
வெட்டப்பட்டுள்ள யானை தடுப்பு அகழிகள் ஆழமாக இல்லாததால் மண் மூடி
கிடக்கிறது. சில பகுதிகளில் அகழி வெட்டாததால் யானைகள் சுலபமாக
தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. தமிழக அரசு
வனத்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி அகழி
களை சீரமைத்து,
யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். யானைகளால் சேதம்
அடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை காலதாமதமின்றி வழங்க
வேண்டும். இவ்வாறு கூறினர்.
