/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
/
தொடர் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
ADDED : ஆக 15, 2025 02:24 AM
ஈரோடு, இன்று சுதந்திர தினம். நாளை கோகுலாஷ்டமி. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை. இதனால் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று மாலை வந்தனர்.
இதனால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகரித்தது. பலர் குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளுடன் ஊருக்கு புறப்பட்டனர். குடும்பத்துடன் ஊருக்கு கிளம்பியவர்கள் பெரும்பாலும் மாலை, 5:00 மணிக்கு பின்னரே வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் மாலை, 4:00 மணி முதலே கல்லுாரி மாணவ, மாணவிகள் பஸ் ஸ்டாண்டில் அதிகம் திரண்டனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் காணப்பட்டது. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

