ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: புரட்டாசி மாதம் முழுவதுமாக முடிந்த நிலையில், அந்தியூரில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஆட்டிறைச்சி, மீன், கோழிக்கறி எடுக்க, கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். குறிப்பாக அந்தியூர் பாலம் அருகே உள்ள கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
ஆட்டுக்கறி கிலோ, 800 ரூபாய், பிராய்லர் கோழி கிலோ, 250 ரூபாய், நாட்டு கோழி கிலோ, 700 ரூபாய்க்கும் விற்றது. ஜிலேபி மீன் கிலோ, 180 ரூபாய், கட்லா மீன், 140 ரூபாய், பில்கண்டை மீன், 170 ரூபாய்க்கும் என விற்பனையானது. விலையை பற்றி கண்டு கொள்ளாமல், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

