ADDED : ஜூலை 27, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
ரங்க சமுத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் நாகராஜ், 74, தொழிலாளி.
எஸ்.ஆர்.டி., கார்னரில் சாலையை கடப்பதற்காக சைக்கிளுடன் நேற்று காலை
நின்று கொண்டிருந்தார்.
அப்போது கோவையில் இருந்து சத்தியமங்கலம்
நோக்கி வந்த தனியார் பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த
நாகராஜ், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்படும் வழியில் இறந்தார். பஸ் டிரைவர் மாரிமுத்து மீது, சத்தி
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
