/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீ
/
சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீ
ADDED : ஜன 24, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி; பவானி அருகே வாய்க்கால்பாளைம், பெரியார் நகரை சேர்ந்தவர் பானுமதி, 38; தனியார் நிறுவன தொழிலாளி. குடிசை வீட்டில் வசிக்கிறார்.
சுவாமி படத்தின் முன் நேற்று விளக்கேற்றி கும்-பிட்டுவிட்டு, ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிய, அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பற்றியது. இதில் பீரோ, கட்டில், சமையல் பொருள் எரிந்தது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

