ADDED : ஆக 11, 2025 08:24 AM
சேலம்: ஆக., 10ஐ கறுப்பு நாளாக அனுசரித்து, எஸ்.சி., -எஸ்.டி., கிறிஸ்தவ சிறுபான்மையினத்தவர், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் தலைமை வகித்தார்.
எஸ்.சி., - எஸ்.டி., பணிக்குழு செயலர் கிரகோரிராஜன் பேசுகை யில், ''தலித் கிறிஸ்தவர்கள், சம உரிமைக்கான போராட்டத்தை, 1950 முதல், இன்று வரை பல்வேறு வடிவங்களில் நடத்தி வருகின்றனர். எந்த ஆட்சியாளர்களும், புரியாமலும், புரிந்து கொள்ளாமலும் இருக்கின்றனர். அதனால் சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்ட பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகிய துறைகளில் தலித் கிறிஸ்தவர்களுக்கு, மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது,'' என்றார்.மேலும் கிறிஸ்தவர்களின் உரிமையை பறிக்காதே; தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி., பட்டியலில் இணைத்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமானோர் கோஷம் எழுப்பினர்.