/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் ரவுண்டானாவில் பழுதான லாரியால் 'பாதிப்பு'
/
காங்கேயம் ரவுண்டானாவில் பழுதான லாரியால் 'பாதிப்பு'
காங்கேயம் ரவுண்டானாவில் பழுதான லாரியால் 'பாதிப்பு'
காங்கேயம் ரவுண்டானாவில் பழுதான லாரியால் 'பாதிப்பு'
ADDED : செப் 09, 2025 02:22 AM
காங்கேயம், காங்கேயத்தின் முக்கிய பகுதியான காங்கேயம் போலீஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், நேற்று காலை, 11:00 மணியளவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பல்லடத்துக்கு சோயா மாவு ஏற்றி வந்த ஒரு லாரி சிக்னலில் காத்திருந்து கோவை ரோட்டுக்கு திரும்பியது.
நீளமான லாரி என்பதால் பக்கவாட்டில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் வலது புற டயர் ஒன்று வெடித்து, ஆக்சில், சேக்கப்சர் சேதமானது. இதனால் ஒரு பக்கமாக சாய்ந்து நகர முடியாமல் நடுரோட்டிலேயே நின்று விட, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சிறு சிறு வாகன விபத்தும் நடந்தது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.