ADDED : மார் 16, 2026 07:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோட்டில் இருந்து திருச்சி, கரூர், வெள்ளகோவில் மட்டுமின்றி தென் மாவட்டங்கள், பழனி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பிரதான பாலமாக, ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது.
பாலத்தின் கீழ் உள்ள சாலை அடிக்கடி சேதமடைகிறது. சில மாதங்களுக்கு முன் வரை சேதங்களை சீரமைக்க, 40 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நுழைவு பாலத்தின் ஒரு பகுதியில் சாலை சேதமடைந்துள்ளது. அதில் நீர் தேங்கியும், கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டியவாறும் உள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில் மேலும் சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விரைந்து சாலையை செப்பனிட, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
