அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணியில் வால்வுகள் சேதத்தால் நீரேற்றம் பாதிப்பு
அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணியில் வால்வுகள் சேதத்தால் நீரேற்றம் பாதிப்பு
ADDED : ஜூன் 28, 2026 02:18 AM
ஈரோடு; பவானிசாகர் அணை உபரி நீரை, பவானி, காளிங்-கராயன் அணைக்கட்டில் எடுத்து, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறண்ட குளம், குட்டை, ஏரிகளில் நிரப்ப, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஏற்படுத்தினர். பருவமழை காலத்தில், 1.5 டி.எம்.சி., நீரை மட்டும் பம்பிங் செய்து குழாய் மூலம், 1,045 குளம், குட்டை, ஏரிக்கு வழங்க பவானி, நல்ல
கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்-கன்பாளையம்,
எம்மாம்பூண்டி, அன்னுார் என ஆறு இடங்களில் நீரேற்று நிலையம் மூலம் நீரேற்றம் செய்து சேர்த்தனர்.
இந்நீர் நிலைகளுக்கு செல்வதற்காக, காளிங்க-ராயன் அணைக்கட்டு பகுதியில் கிடைக்கும் நீரை வைத்து, பரிசோதனை முறையாக, தண்ணீர் செல்லாத நீர் நிலைகளுக்கு தண்ணீரை ஏற்றி வருகின்றனர். இந்நிலையில் நம்பியூர், எம்மாம்-பூண்டி பகுதியில் இத்திட்ட குளங்களுக்கு நீரேற்றம் செய்து, அதிகாரிகள் வால்வுகளை பரி-சோதித்தனர். அப்போது மர்ம நபர்கள் குழாய், வால்வுகளை சேதப்படுத்தியதை அறிந்து நம்-பியூர் போலீஸில் புகார் செய்துள்ளனர். தவிர, பல இடங்களில் சிறிய அளவில் குழாய் உடைப்பு, வால்வு சேதப்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதனால் நீரேற்ற பணி பாதித்தது. தற்போது அவற்றை அதிகாரிகள் சீரமைத்து, நீர் நிலைக-ளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்து வரு-கின்றனர். குழாய், வால்வுகளை சேதப்படுத்-தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
