/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விரிசல் விழுந்த கம்பத்தால் காத்திருக்கும் ஆபத்து
/
விரிசல் விழுந்த கம்பத்தால் காத்திருக்கும் ஆபத்து
ADDED : ஆக 29, 2024 07:36 AM
கோபி: கோபி, பஜனை கோவில் வீதியில், விரிசல் விழுந்த மின்கம்பத்தால் ஆபத்து காத்திருக்கிறது.
கோபி பஜனை கோவில் வீதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அப்பகுதியில் வரிசையாக ஐந்து மின்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில் 'W17' என்ற பதிவெண் கொண்ட மின்கம்பம் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இதனால் அதன் கட்டமைப்பில் விரிசல் விழுந்து, எந்தநேரத்திலும் சாய்ந்து விழும் சூழல் நிலவுகிறது. அதேசமயம் தற்போது அடிக்கடி பெய்யும் மழையால், விரிசல் விழுந்த மின்கம்பத்தால் ஆபத்து காத்திருக்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மின்கம்பத்தை மாற்றி அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

