/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குரூப்-4' தேர்வுக்கான தேதி அறிவிப்பு: கோபி கிளை நூலக நூல்களுக்கு 'மவுசு'
/
'குரூப்-4' தேர்வுக்கான தேதி அறிவிப்பு: கோபி கிளை நூலக நூல்களுக்கு 'மவுசு'
'குரூப்-4' தேர்வுக்கான தேதி அறிவிப்பு: கோபி கிளை நூலக நூல்களுக்கு 'மவுசு'
'குரூப்-4' தேர்வுக்கான தேதி அறிவிப்பு: கோபி கிளை நூலக நூல்களுக்கு 'மவுசு'
ADDED : பிப் 01, 2024 11:58 AM
கோபி: 'குரூப்-4' தேர்வுக்கான தேதி அறிவிப்பால், அதற்கு தயாராக வேண்டி, கோபி கிளை நுாலகத்தில், கூட்டம் களைகட்டுகிறது.
தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, 6,244 பதவிகளுக்கான, 'குரூப்-4' தேர்வு, வரும் ஜூன் மாதத்தில் நடப்பதாக, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் துவங்கியுள்ளது. அதனால், தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம் தேர்வுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அதற்கு தயாராக வேண்டும் என்பதால், நுாலகத்தை நாடுவோர் அதிகரித்துள்ளனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம், கோபி வடக்கு பார்க் வீதியில் இயக்கும், கோபி கிளை நுாலகத்தில், குரூப்-4 தேர்வுக்கு, தேர்வு செய்து படிப்போரின் எண்ணிக்கை நேற்று அங்கு அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, முதல் தளத்தில் இயங்கும், குறிப்புதவி பிரிவில், குடும்ப பெண்கள் முதல், பட்டதாரி பெண்கள் வரையும், அதேபோல் ஆண்களும், தங்களுக்கு தேர்வுக்கு தேவையான நுால்களை எடுத்து குறிப்பெடுத்து படித்தனர்.
குறிப்பாக, ஆறாம் வகுப்பில், மூன்று பருவ புத்தகங்கள், எட்டாம் வகுப்பு தமிழ் பாடம், ஒன்பதாம் வகுப்பு அறிவியல், ஏழாம் வகுப்புக்கான, தமிழ்பாடத்தில் மூன்று பருவத்துக்கான புத்தகம், பத்தாம் வகுப்பு தமிழ், ஒன்பதாம் வகுப்பு அறிவியல் என புத்தகங்களை தேர்வு செய்து பயின்றனர்.
அதேசமயம் நுாலகத்தில் உள்ள குறிப்புதவி பிரிவிலும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்புகளுக்கான, மொத்தம் 46 வகையாக புத்தகங்கள் தயார் நிலையில், போட்டித்தேர்வுக்கான ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வுக்கான தேதி அறிவிப்பால், கோபி கிளை நுாலகத்தில் கூட்டம் நேற்று களைகட்டியது. வழக்கத்தை விட தேர்வுக்காக பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நுாலக அலுவலர்கள்
தெரிவித்தனர்.