ADDED : பிப் 27, 2024 02:07 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்த, கவுரிசங்கரின், 15 வயது மகள், முருகன்புதுாரில் உள்ள நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படித்தார்.கடந்த, 24ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, தன் தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறி, வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால், நீண்ட நாரமாகியும் வீடு திரும்பவில்லை. அதே சமயம் அவரின் தாத்தா வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கும் நிவேதா வரவில்லை என தெரிந்தது. அவரின் தாய், கவிதா, 38, கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
