ADDED : டிச 31, 2025 05:36 AM
கோபி: கோபி அருகே கூகலுாரை சேர்ந்த பண்ணாரி மகள் மஞ்சு, 19; கடந்த, 23ம் தேதி வேலை தேடி வருவதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் தாய் ஜெயம்மாளுக்கு போன் செய்து, கரூரில் இருப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாக கூறி, சுவிட்ச் ஆப் செய்தார். ஜெயம்மாள் புகாரின்படி கோபி போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோடு சூரம்பட்டி டீச்சர்ஸ் காலனி கண்ணகி வீதி தம்பிகாடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி-சுசீலா தம்பதி மகன் குமார், 35; பக்கவாதம் மற்றும் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். யாசகம் பெற்றதால் மனைவி, மகன், மகள் பிரிந்து சென்று விட்டனர். தாய் சுசீலா குமாரை பராமரித்து வந்தார். அடிக்கடி வீட்டில் இருந்து செல்வார், பிறகு திரும்பி விடுவார். இந்த முறை நவ., 10ம் தேதி வெளியில் சென்றவர் அதன் பிறகு திரும்பவில்லை. சுசீலா புகாரின்படி சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

