ADDED : மார் 27, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
பவானி:ஆப்பக்கூடலில்
கவுந்தப்பாடி சாலை பகுதியில் வசிப்பவர் நாகஜோதி, 40; கூலி
தொழிலாளி. இவரின், 15 வயது மகள், ஆப்பக்கூடலில் ஒரு துணிக்கடையில்
வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து, குடும்ப
செலவுக்கு தேவை என்று, 1,000 ரூபாய் வாங்கியுள்ளார். பணத்தை பெற்ற
நிலையில் வீட்டுக்கு செல்லவில்லை. இதையறிந்த நாகஜோதி அதிர்ச்சி
அடைந்தார். அவர் புகாரின்படி, ஆப்பக்கூடல் போலீசார் தேடி
வருகின்றனர்.
