ADDED : மார் 31, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு கணபதி பாளையம் சாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகள் தர்ஷினி, 17; பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். மூன்றாண்டாக வலிப்பு நோய் இருந்தது.
மாத்திரை சாப்பிடுகிறார். கடந்த, 28ல் ஈரோட்டில் உள்ள தோழியை பார்த்து வருவதாக கூறி சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது மொபல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தர்ஷினியின் தாய் புகாரின்படி மலையம்பாளையம் போலீசார், சிறுமியை தேடி வருகின்றனர்.
