ADDED : நவ 03, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:கொடுமுடி ஒத்தகடை தளுவம்பாளையத்தை சேர்ந்த பெயிண்டர்  தண்டபாணி  மகள்  சதுர்த்தனா, 19; கரூர் அருகே குட்டக்கடை அம்பரா டெக்ஸ்  நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த, 30ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தண்டபாணி புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வருகின்றனர்.
* மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளி காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சைசிங் மில் தொழிலாளியான இவரின் மகள் ரசிகா, ௧5; தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி. தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் தந்தை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 31ம் தேதி பள்ளி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. விஜயகுமார் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

