ADDED : ஏப் 14, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வெண்டிபாளையம் பகுதியில், ஏராளமான மீன்கள் நேற்று செத்து மிதந்தன. வாய்க்காலில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே கடந்த, 7ல் நீர் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் வாய்க்காலில் பெருமளவில் சாய கழிவு நீர், பிளீச்சிங் நீர் செல்கிறது. இதனால்தான் மீன்கள் செத்து மிதப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதுபற்றி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என்றும் கூறினர்.
