ADDED : ஜூலை 25, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே நல்லிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பணன், 60; கூலி தொழிலாளி. கடன் தொல்லையால் கடந்த இரு மாதங்களாக மன வேதனையில் இருந்தார். இதனால் கடந்த, 9ம் தேதி பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
* கோபி, கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி, 47, பனியன் கம்பெனி தொழிலாளி; மகன் திருமணத்துக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். ஆனால் சரியாக வேலை இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் வேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் லட்சுமி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் அரவிந்த் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.