ADDED : ஆக 20, 2026 03:58 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: தலமலை வனப்பகுதியில், அழுகிய நிலையில் புலி சடலம் மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட துாண்டிக்கரை பள்ளம் பகுதியில், நேற்று முன்தினம் காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளத்தில், அழுகிய நிலையில் கிடந்த புலி சடலத்தை மீட்டனர்.
சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற்கூராய்வு செய்த பின், அதே இடத்தில் எரியூட்டப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில், 'இயற்கையாக புலி இறந்து, 10 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம். உடல் அழுகியுள்ளது. இறந்தது ஆண் புலியா, பெண் புலியா என்பது, உடற்கூராய்வு முடிவில் தெரிய வரும்' என்றனர்.
