தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சென்னம்பட்டி வனத்தில் மான் வேட்டை?

சென்னம்பட்டி வனத்தில் மான் வேட்டை?

சென்னம்பட்டி வனத்தில் மான் வேட்டை?


ADDED : நவ 13, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி வனசரகத்தில் ஆயிரக்கணக்கான மான்கள் வசிக்கின்றன. சில சமயங்களில் மான்கள் வழிதவறி, வனத்தை ஒட்டிய விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விடுவதுண்டு. நெரிஞ்சிப்பேட்டை சித்தையன் நகரில் ஒரு தோட்டத்தில், ஒரு ஆண் கடமான் நேற்று இறந்து கிடந்தது. சென்னம்பட்டி வனத்துறையினர் ஆய்வில் மூன்று வயதான கடமான் என்பதும், 10 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக டாக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர், உடற்கூறு பரிசோதனை செய்தனர். வழிதவறி வந்த கடமான் விவசாய நிலத்தில் இறந்ததா? அல்லது வேட்டைக்காரர்களால் வீழ்த்தப்பட்டதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கம்போல் வனத்துறையினரும் மான் சாவுக்கான காரணம் குறித்து தெரிவிக்காதது, மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us