ADDED : ஏப் 15, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோட்டில், இரவில் சாலையை கடக்க முயன்ற மான் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தது.
ஈரோடு, பெரிய சடையம்பாளையம் ரிங்ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் சாலையை கடக்க முற்பட்டது.
அப்போது அவ்வழியே சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மான் அதே இடத்தில் பலியானது. ஈரோடு தாலுகா போலீசார் அளித்த புகார்படி, வனத்துறையினர் மானை மீட்டு சென்றனர்.
