ADDED : மார் 14, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: வெள்ளகோவிலை அடுத்த வட்டமலைகரை ஓடை பகுதியில் மான்கள் நடமாட்டம் உள்ளது. இங்கிருந்து இரண்டரை வயதான ஒரு ஆண் மான் இரை தேடி, முத்துார் அருகே தண்ணீர்பந்ததல் பகுதிக்கு வந்தது.
அங்கு விவசாய நிலத்தில் நேற்று மேய்ந்து கொண்டிருந்த மானை, தெருநாய்கள் சேர்ந்து துரத்தின. சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டி விட்டு, லேசான காயம-டைந்த மானை மீட்டனர். காங்கேயம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.வனத்துறை அலுவலர் மவுனிகா, வனக்காப்பளர் சுகன்யா ஆகியோர் சென்றனர். மானின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு, முத்துார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, ஊதியூர் காப்புக்காட்டில் மானை விடுவித்தனர்.
