நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டசபை தொகுதியில், 295 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.சத்தி நகராட்சி பகுதி ஓட்டுச்சாவடிகளில் காலையில் மிதமான கூட்டம் இருந்தது.
மதியம் குறைய தொடங்கியது. நகராட்சி பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆசனுார் அருகே தேவர் நத்தத்தில் ஓட்டுச்சாவடி எண்-58ல், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இயந்திரத்தை சரி செய்து, அரை மணி நேரத்துக்குப் பிறகு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

