ADDED : நவ 29, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில் தார்ச்சாலையை பாதுகாக்க, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, வெள்ளத்
தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு
மாநகராட்சி நான்காவது மண்டலம், 56வது வார்டுக்கு உட்பட்டது
கிருஷ்ணா நகர். இப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதி பிரதான
சாலையில் தடுப்பு சுவர் இல்லை. மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு
வருகிறது. சாலையை ஒட்டிய வீட்டுமனை, பிரதான சாலை மட்டத்தில்
இருந்து, 5 அடி தாழ்வாக அமைந்துள்ளது. இதனால் மழை காலத்தில் மழை நீர்
தேங்கி நிற்கிறது. மழை நீர் ஓட்டத்தால் சாலையோரம் மண் அரிப்பு
ஏற்பட்டு சாலை சேதமாகிறது. தார்ச்சாலையை பாதுகாக்க, மக்கள்
பாதுகாப்பை உறுதி செய்ய வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
