/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பராமரிப்பு ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
சாலை பராமரிப்பு ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள, நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார்.
இறந்து போன சாலை பணியாளர்களின் குடும்பத்துக்கு பண பலன்களும், வாரிசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலமான, 41 மாதத்தை பணிக்காலமாக ஏற்க வேண்டும் என்பன உள்பட உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, சண்முகம், செல்வன், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

