/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
ஈரோட்டில் வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 10, 2024 01:42 AM
ஈரோட்டில் வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக். 10-
பெருந்துறையில், அரசு விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதிதிராவிட மாணவர்கள், 50 பேருக்கு, அதே விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்க கோரி, வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு, காளைமாட்டு சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன், மாவட்ட பொருளாளர் விஜயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொறுப்பாளர் துரை வளர்மதி, முன்னாள் மண்டல செயலாளர் சுசி கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பெருந்துறை பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், அங்குள்ள அரசு சிறுபான்மையினர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். தற்போது, எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படிக்க அனுமதியில்லை என வெளியேற்றியதால், படிப்பு பாதியில் விடும் சூழல் உள்ளது. எனவே, 50 ஆதிதிராவிட மாணவர்களின் படிப்பை உறுதி செய்து, பட்டம் பெற, அதே விடுதியில் தங்கி படித்திட மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற கல்லுாரி மாணவர்கள் தலையில் பெட்ஷீட், தலையணை, பாய் போன்றவற்றை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

