/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கறுப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்
/
கறுப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2024 02:01 AM
கறுப்பு துணி கட்டி
கண்டன ஆர்ப்பாட்டம்
காங்கேயம், நவ. 15-
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது என்ற, முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை கண்டித்தும், புதிய ஓய்வு ஊதிய ஒழிப்பு இயக்கத்தின் சார்பில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கண்களில் கறுப்பு துணி கட்டி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் பேசினார்.
* தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தாராபுரம் வட்ட கிளை துணைத் தலைவர் பெரியசாமி தலைமையில், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.