ADDED : ஜன 06, 2026 08:06 AM
அந்தியூர்: தொடக்கப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அந்தியூர் வட்டார கல்வி அலுவலர் கோபாலை கண்டித்து, அந்தியூர் கிழக்குப்பள்ளி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் ஆனந்தகுமார், கோபி கல்வி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட தலைவர் புகழேந்தி, மாவட்ட செயலாளர் முத்து ராமசாமி உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வட்டார கல்வி அலுவலர் கோபாலின், பள்ளி நலத்திட்ட ஒதுக்கீட்டு தொகை முறைகேடு, கையூட்டு கேட்டு வற்புறுத்தி மிரட்டுதல், பெண் ஆசிரியர்களிடம் தரம் தாழ்ந்த செயல்பாடு, செல்போன் பதிவு மூலம் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குதல், பள்ளி பார்வை மற்றும் அலுவலகத்தில் பேனா கேமரா கொண்டு பதிவு செய்தல், சுய கட்டுப்பாடு மற்றும் மோசமான செயல்பாடு, ஆசிரியர் விரோத போக்கு ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
