/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்தி
/
அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்தி
ADDED : மே 09, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, திரளான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஈரோடு ராஜாஜிபுரத்தில் மாகாளியம்மன், மதுரை வீரன், முனியப்பன், கருப்புராயன் சுவாமி கோவில் உள்ளது.
நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த, 30ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் இருந்து, அம்மனை புஷ்ப ரதத்தில் அலங்கரித்து, பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், ஊர்வலமாக கோவில் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், பொங்கல் வைத்தனர்.