/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிடாரியூர் மாரியம்மன் விழா பக்தர்கள் பக்தி பரவசம்
/
பிடாரியூர் மாரியம்மன் விழா பக்தர்கள் பக்தி பரவசம்
ADDED : அக் 23, 2025 01:58 AM
சென்னிமலை, சென்னிமலை அடுத்துள்ள, முகாசிபிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 14ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கம்பத்திற்கு தினமும் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.
நேற்றைய பொங்கல் விழாவில் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. * அதே, போல், பெரியார் நகர் மாரியம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவிலும், ஆடு, கோழி பலி கொடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.