தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


ADDED : மார் 12, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்-கடன் செலுத்தினர்.

இக்கோவிலில், நடப்பாண்டு குண்டம் திருவிழா கடந்த பிப்., 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு குண்டம் சுத்தம் செய்து, பக்தர்கள் காணிக்கை-யாக கொடுத்த விறகுகளை பயன்படுத்தி, குண்டம் பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார்.பின்னர் காப்பு கட்டி விரதமிருந்து வந்த சிறுவர், சிறுமியர், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்-தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்-மனை தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்கா-ரத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று (மார்ச் 12) மாலை 5:00 மணிக்கு மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகி-றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us