வீரமுத்தியம்மன் கோவில் விழா குண்டம் இறங்கிய பக்தர்கள்
வீரமுத்தியம்மன் கோவில் விழா குண்டம் இறங்கிய பக்தர்கள்
ADDED : ஆக 13, 2026 06:02 AM
ஈரோடு:ஈரோடு
பெரியசேமூர் தென்றல் நகர் அடுத்த, குறிஞ்சி நகரில் அக்னி தெய்வம் வீரமுத்தியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம் 28ம்
தேதி துவங்கியது. அன்றைய தினம் யாக பூஜை, கொடி மரம் ஏற்றுதல் மற்றும்
காப்பு கட்டும் விழா நடைபெற்றது.
நேற்று முன்தினம் பக்தர்கள்
தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தி, காவடி சுமந்து, தீச்சட்டி ஏந்தி
வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வான குண்டம்
இறங்குதல் நேற்று நடைபெற்றது. இதற்காக, நேற்று முன்தினம் இரவு குண்டம்
சுத்தம் செய்து தயார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை,
கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்து
வந்த சிறுவர், சிறுமியர், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள்
வரிசையாக குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர்
மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று முளைப்பாரி எடுத்தல்,
விளையாட்டு போட்டி, நாளை உச்சிக்கால பூஜை, 15ம் தேதி மறுபூஜையுடன்
விழா நிறைவு பெறுகிறது.
