/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவக்கம்
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவக்கம்
ADDED : பிப் 11, 2026 06:10 AM
ஈரோடு: தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி, கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, 2,080 அங்கன்வாடி மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு, அல்பெண்டாசோல், 7 லட்சத்து, 25,812 பேருக்கும், 20 முதல், 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, 1 லட்சத்து, 75,531 பெண் பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. நேற்று மாத்திரை வழங்காமல் விடுபட்டோருக்கு வரும், 17ல் வழங்கப்படும். இவ்வாறு பேசினார்.

