தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்


ADDED : செப் 30, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்; தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் அடங்-கிய பேலட்ஷீட் பொருத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 22, 23 தேதிகளில் தபால் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச்-சென்று, தபால் ஓட்டு பதிவு செய்யப்பட்டது. இதில், 1,201 பேர், தபால் ஓட்டு பதிவு செய்தனர். தேர்தல் நாளான அக். 6ம் தேதி, தொகுதியிலுள்ள 320 ஓட்டுச்சாவடிகளிலும், மின்னணு ஓட்டுப்ப-திவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு நடைபெற உள்-ளது.இதற்காக, 20 சதவீதம் கூடுதலாக பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட், 30 சதவீதம் கூடுத-லாக 'விவி' பேட் ஒதுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஸ்ட்ராங் ரூமிலிருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்தி-ரங்கள் எடுக்கப்பட்டு, தாராபுரம் அரசு கலை கல்-லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர் புகைப்படம், பெயர், கட்சி சின்னம் ஆகியவற்றுடன் கூடிய பேலட்ஷீட் பொருத்தப்பட்டு, பேலட் யூனிட்டுகள் தயார்படுத்-தப்பட்டுள்ளன. 22 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 2 பேலட் யூனிட் பயன்படுத்தப்பட-வுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us