ADDED : மார் 29, 2026 02:32 AM
ஈரோடு :மாவட்டத்தில் உள்ள பதற்றமான பூத்களில், பாதுகாப்பு ஏற்பாடுகளை சரக டி.ஐ.ஜி., பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 77 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி பி.பெ.அக்ரஹாரம் அரசு இசைப்பள்ளி ஓட்டுச்சாவடி, பெருந்துறை தொகுதி விஜய மங்கலத்தில் ஒரு ஓட்டுச்சாவடி, கோபி தொகுதிக்கு உட்பட்ட பொலவக்காளி
பாளையம் ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ஓட்டுச்சாவடிக்குள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்த ஆலோசனை கூறினார்.
ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, எஸ்.பி., கிரண் ஸ்ருதியிடம் கேட்டறிந்தார். கோபி டி.எஸ்.பி., அலுவலகத்திலும் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்தார். இறுதியாக பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பாதுகாப்பு
ஏற்பாடுகளையும் டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
