/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூரையில்லாத பள்ளி கழிப்பிடம் ஈரோடு மாநகராட்சி கவனிக்குமா?
/
கூரையில்லாத பள்ளி கழிப்பிடம் ஈரோடு மாநகராட்சி கவனிக்குமா?
கூரையில்லாத பள்ளி கழிப்பிடம் ஈரோடு மாநகராட்சி கவனிக்குமா?
கூரையில்லாத பள்ளி கழிப்பிடம் ஈரோடு மாநகராட்சி கவனிக்குமா?
ADDED : ஆக 05, 2011 01:57 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகழிப்பிடத்துக்கு கூரையில்லாததால், பள்ளி மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மூன்று மேல்நிலைப்பள்ளிகள், ஐந்து நடுநிலைப்பள்ளிகள், எட்டு துவக்கப்பள்ளிகள் உள்ளன. கடந்த கல்வியாண்டில் பள்ளிக் கட்டிடங்களுக்கு பராமரிப்பு பணி செய்தல் மற்றும் கூடுதல் கழிப்பிட வசதிகளுக்காக 1.1 கோடி ரூபாய், மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை மாநகராட்சி பள்ளிகளில் தேவைக்கேற்ப கட்டிட வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் முழுமையடையவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, அடிப்படை வசதிகள் இல்லாமல் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிசிரமப்படுகிறது. 1967 ஜூலை 1ல் நடுநிலைப்பள்ளியாக துவங்கப்பட்ட இப்பள்ளியில், தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி உதவி ஆசிரியர்கள், ஆறு இடைநிலை உதவி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 21 ஆயிரம் சதுர அடியில் இயங்கி வரும் இப்பள்ளியில் மொத்தம் 300 பேர் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்காக மாநகராட்சி சார்பில், சென்றாண்டில் கழிப்பிடம் கட்டித் தரப்பட்டது. இரு பாலருக்கும் தனித்தனியே உள்ள கழிப்பிடத்தின் மேற்கூரையில், சிமென்ட் ஷீட் அமைக்க, மாநகராட்சி சார்பில் இரும்பு ஆங்கிள் பதிக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை மேற்கூரை அமைக்கவில்லை. கழிப்பிடம் அருகிலேயே மாடி வீடுகள் உள்ளன. இதனால், பள்ளி மாணவியர் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் ஓராண்டாக அவதியுறுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, இப்பள்ளிக் கழிப்பிடத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்.