/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமூக விரோதிகள் கூடாரமான ரயில்வே போலீஸ் குடியிருப்பு!
/
சமூக விரோதிகள் கூடாரமான ரயில்வே போலீஸ் குடியிருப்பு!
சமூக விரோதிகள் கூடாரமான ரயில்வே போலீஸ் குடியிருப்பு!
சமூக விரோதிகள் கூடாரமான ரயில்வே போலீஸ் குடியிருப்பு!
ADDED : ஆக 08, 2011 03:14 AM
ஈரோடு:ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ரயில்வே போலீஸார் குடியிருப்பு சிதிலமடைந்துள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.ஈரோட்டில் பணியாற்றும் ரயில்வே போலீஸாருக்காக, பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில், குடியிருப்பு கட்டப்பட்டது.
ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ.,க்கள் மற்றும் 29 போலீஸாருக்கு வீடுகள் இருந்தன. சில ஆண்டுக்கு முன், ரயில்வே போலீஸாருக்காக பிரம்மாண்டமான பங்களா குடியிருப்பு கட்டப்பட்டு, அதில் போலீஸார் குடியேறினர். போலீஸார் குடியிருந்த பழைய குடியிருப்பு தற்போது, பாழடைந்து இடிந்துள்ளது. பாதுகாப்பில்லாத போலீஸார் குடியிருப்பு, தற்போது இரவு நேரங்களில் மர்ம நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில், ரயில்வே போலீஸாருக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பு தற்போது இடிந்த கட்டிடங்களுடன் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த வீடுகளில் யாரும் குடியிருக்காததால், வீடுகள் பாழடைந்தும், ஆள் நடமாட்டமின்றியும் உள்ளன. இரவு நேரங்களில் இப்பகுதியில் உலா வரும் மர்ம நபர்களுக்கு, போலீஸாரின் குடியிருப்பே புகலிடமாக உள்ளது. இதனால் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் அதிகரிக்கின்றன. மர்ம நபர்களின் புகலிடமாக உள்ள போலீஸார் குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்க வேண்டும், என்றனர்.

