sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சோனியா நலன்பெற சிறப்பு யாகம் ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர், கட்சித் தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பின், குணமாகி விரைவில் நாடு திரும்ப வேண்டி, நேற்று

/

சோனியா நலன்பெற சிறப்பு யாகம் ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர், கட்சித் தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பின், குணமாகி விரைவில் நாடு திரும்ப வேண்டி, நேற்று

சோனியா நலன்பெற சிறப்பு யாகம் ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர், கட்சித் தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பின், குணமாகி விரைவில் நாடு திரும்ப வேண்டி, நேற்று

சோனியா நலன்பெற சிறப்பு யாகம் ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர், கட்சித் தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பின், குணமாகி விரைவில் நாடு திரும்ப வேண்டி, நேற்று


ADDED : ஆக 08, 2011 03:19 AM

Google News

ADDED : ஆக 08, 2011 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர், கட்சித் தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பின், குணமாகி விரைவில் நாடு திரும்ப வேண்டி, நேற்று ஈரோடு கற்பகவிநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா, கடந்த மாத இறுதியில் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டார். மருத்துவர்கள் அறிவுரைப்படி, அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பின் மூன்று வாரகால ஓய்வுக்கு தேவை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் சிகிச்சை பெறும், சோனியா பூரண குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என, ஈரோடு திருநகர் காலனி, கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் சார்பில், கணபதி ஹோமம், மிருத்தியஞ்சிய ஹோமம், ஆயில்ய யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. ஈரோடு பார்லிமென்ட் காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.பி.,சௌந்திரம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நல்ல கல்வியால் மாணவர் வாழ்வு பிரகாசமாகும் :பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர் கருத்து

ஈரோடு: ''ஆசிரியர்கள் நல்ல கல்வி வழங்கினால் மட்டுமே மாணவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்'' என, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார். ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நேற்று 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. பாரதியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுவாமிநாதன் பட்டங்களை வழங்கினார். 5 தங்க மெடல், 44 பல்கலைக்கழக ரேங்க் சான்றிதழ் மற்றும் 736 மாணவர்களுக்கு பட்டமளித்து அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் பாடம் நடத்துவது மட்டும் கடமையல்ல. மாணவர்கள் திறமையை கண்டறிந்து அந்த திறமையை மேலும் அதிகப்படுத்தும் வகையில், வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்த திறமை இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். மாணவர்கள் மத்தியில் திறமை அதிகம் பயனுடையதாகும். சொந்த முயற்சியால் அவர்களும் முன்னுக்கு வர ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். அப்போது தான் நல்ல எதிர்காலம் உருவாகும். எதிர்காலம் என்பது சவாலானது. நல்ல கல்வி வழங்கினால் மட்டுமே மாணவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். நல்ல கல்வியை போதிக்க ஆசிரியர்களின் கடமை. இந்தியாவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்கள் திறமை, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்கு அதிகமுண்டு. வளர்ச்சி என்பது ஒரு முறை வந்தால் மட்டும் போதாது. தொடர்ந்து வளர்ச்சி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கொங்கு வேளாளர் கல்வி நிறுவனத் தலைவர் முருகேசன், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பழனிச்சாமி, கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், முதல்வர் ராமன் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us