sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விரைவு பட்டா வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

/

விரைவு பட்டா வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

விரைவு பட்டா வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

விரைவு பட்டா வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு


ADDED : ஆக 08, 2011 03:19 AM

Google News

ADDED : ஆக 08, 2011 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான விரைவு பட்டா மாறுதல் திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும், அந்தந்த ஊர்களின் வி.ஏ.ஓ.,க்களிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்'' என, கலெக்டர் காமராஜ் நேற்று தெரிவித்தார்.

மக்களின் வசதிக்காகவும், அடிப்படை தேவைக்களை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதற்காகவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்துகிறது. அதில் ஒன்று, விரைவு பட்டா மாறுதல் திட்டமாகும். ஈரோடு மாவட்டத்தில் பட்டா மாறுதல் கேட்கும், பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தை பெற்று, உரிய முறையில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை முழுமையாக இணைத்து, அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடம் கொடுத்து, அதற்கான ஒப்புகையை பெற்றுக்கொள்ளலாம். பிரதி வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். பட்டா மாறுதல் கோரும் மனுக்களில் உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு 15 நாட்களுக்குள்ளும், உட்பிரிவு செய்யப்பட வேண்டிய இனங்களுக்கு, மனு பெறப்பட்ட 30 நாட்களுக்குள்ளும், பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் சிட்டா நகல்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். உட்பிரிவு செய்யப்பட வேண்டிய இனங்களுக்கு மட்டும் மனுதாரர், பட்டா பெறுவதற்கு உட்பிரிவு கட்டணத்தை மனுதாரர் செலுத்த வேண்டும். பிற இன பட்டா மாறுதலுக்கு கட்டணங்கள் ஏதும் செலுத்தத் தேவையில்லை. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும்படி கலெக்டர் காமராஜ் கேட்டுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us