sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வார்டு பிரிக்க சங்குநகர் மக்கள் எதிர்ப்பு :சூரம்பட்டி நகராட்சியை திடீர் முற்றுகை

/

வார்டு பிரிக்க சங்குநகர் மக்கள் எதிர்ப்பு :சூரம்பட்டி நகராட்சியை திடீர் முற்றுகை

வார்டு பிரிக்க சங்குநகர் மக்கள் எதிர்ப்பு :சூரம்பட்டி நகராட்சியை திடீர் முற்றுகை

வார்டு பிரிக்க சங்குநகர் மக்கள் எதிர்ப்பு :சூரம்பட்டி நகராட்சியை திடீர் முற்றுகை


ADDED : செப் 06, 2011 01:45 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி வார்டு பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து, சங்குநகர் பகுதி மக்கள், சூரம்பட்டி நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

காசிபாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் ஆகிய நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் டவுன் பஞ்சாயத்துகள், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், மத்தம்பாளையம் பஞ்சாயத்துகள், ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி வார்டு சமீபத்தில் பிரிக்கப்பட்டது. தற்போது சூரம்பட்டி நகராட்சியில் உள்ள சங்கு நகர் 1, 2, 3, 4 ஆகிய வார்டுகள், மாநகராட்சி 35வது வார்டில் சேர்க்கப்பட்டிருந்தன. தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய வார்டு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 1, 2 ஆகியவை மாநகராட்சி 18வது வார்டாகவும், சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 3, 4 ஆகியவை மாநகராட்சி 16, 17வது வார்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நான்கு வார்டுகளிலும் அதிக அளவில் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். இப்பகுதி வெவ்வேறு வார்டாக பிரிக்கப்பட்டுள்ளதால், ஓட்டுப்போடுவதில் குழப்பம் ஏற்படும் என அச்சப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் நேற்று சூரம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களை ஒரே வார்டில் இணைக்க வேண்டும். தங்கள் பகுதியை பல்வேறு வார்டுகளாக பிரிக்க கூடாது. தங்கள் பகுதியில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக உள்ள நிலையில், இதுபோன்ற பிரிவினை அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும், என வலியுறுத்தினர். பின், கலெக்டர் காமராஜை சந்தித்தும், மனுக்கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us