அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி சேர்க்கை தேதி நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி சேர்க்கை தேதி நீட்டிப்பு
ADDED : செப் 14, 2024 07:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், ஈரோடு, கோபியில் பொறியியல், பொறியியல் அல்லாத மற்றும் இன்டஸ்டிரீ 4.0 திட்டத்தின் கீழ் அதி நவீன தொழில் நுட்பத்துடன் புதிதாக துவங்கப்பட்டுள்ள தொழிற்பிரிவுகளில் முதற்கட்ட கலந்தாய்வு சேர்க்கை நிறைவடைந்த நிலையில் நேரடி சேர்க்கை வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை போன்றவை அசல் மற்றும் நகல், போட்டோ 4, விண்ணப்ப கட்டணம் ரூ.50. சேர்க்கை கட்டணம் இரண்டாண்டு பிரிவுக்கு ரூ.195 மற்றும் ஓராண்டு பிரிவுகளுக்கு ரூ.185 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், முதல்வர் 0424-2275244, 70108-75256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
