ADDED : ஜூலை 24, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைவர் ஆனந்தன் தலைமையில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ஒருவருக்கு, ஏழு கிலோ அரிசி வழங்கும் புதிய தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தம் திரும்ப பெற வேண்டும். அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் (ஏ.ஏ.ஒய்.,) மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை குடும்பங்களுக்கு மாதம், 35 கிலோ அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் இடம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் ஏ.ஏ.ஒய்., அட்டை வழங்க வலியுறுத்தினர். நிர்வாகிகள் மாரிமுத்து, செந்தில்குமார், ரேணுகா, லோகநாதன், கண்ணன், பாவாயி, கலைமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
