ADDED : செப் 03, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், அந்தியூர் தாலுாகா அலுவலகம் முன் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாவித்ரி தலைமை வகித்தார்.
அந்தியூர் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, நுாறு நாள் வேலை தொடர்ச்சியாக தர வேண்டும்.பஞ்., வாரியாக முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தாசில்தார் கவியரசு பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனுக்களை பெற்றார். விரைவில் தீர்வு காண்பதாக கூறவே, போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தாலுாகா செயலாளர் முருகன், பொருளாளர் தமிழரசு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர்.