/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
/
தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
ADDED : பிப் 22, 2025 05:22 AM
சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2023 செப்டம்பரில், தனியார் கல்வியியல் மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். அதில், 16 பேரில், 3 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் அப்போதைய தலைமை ஆசிரியர் பால்ராஜ், அவர்கள் பணிக்கு வந்ததை போன்று, வருகை பதி-வேடு தயாரித்துள்ளார். இதுகுறித்து கல்வி அலுவலர்களுக்கு புகார் சென்றது. அப்போதைய சங்ககிரி மாவட்ட கல்வி அலு-வலர் கோபாலப்பா விசாரித்து, அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பினார்.
இந்நிலையில் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்-குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஞானகவுரி நேற்று உத்தரவிட்டார். அதன்படி பால்ராஜூக்கு ஊதிய உயர்வு, 2 ஆண்டு நிறுத்தி வைக்கப்படும்.

