/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தள்ளுபடியில் ஜவுளி விற்பனை: ஈரோட்டில் முண்டியடித்த மக்கள்
/
தள்ளுபடியில் ஜவுளி விற்பனை: ஈரோட்டில் முண்டியடித்த மக்கள்
தள்ளுபடியில் ஜவுளி விற்பனை: ஈரோட்டில் முண்டியடித்த மக்கள்
தள்ளுபடியில் ஜவுளி விற்பனை: ஈரோட்டில் முண்டியடித்த மக்கள்
ADDED : அக் 22, 2025 07:49 PM

ஈரோடு: ஈரோடு மாநகரில் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மொத்த, சில்லறை விற்பனை ஜவுளி கடைகள் செயல்படுகின்றன.
இப்பகுதி கடைகளில் தீபாவளிக்கு மறுநாள், 'ஸ்டாக் கிளியரன்ஸ்' பெயரில், சிறப்பு தள்ளுபடி அறிவித்து துணி விற்பனை நடக்கிறது. இதன்படி, நேற்று, 30 முதல் 70 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிகாலை, 3:௦௦ மணி முதலே ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் வரத்தொடங்கினர். கடைகளில் துணிகளை பார்வையிட்டு, பிடித்ததை அள்ளிச்சென்றனர். பெரிய கடைகளில் மக்கள் வரிசையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இடவசதி இல்லாத கடைக்காரர்கள், கடைவாசலில் டேபிள் அமைத்து விற்பனை செய்தனர். சாலையோர துணி வி யாபாரிகளும் கூவிக்கூவி விற்பனையில் ஈடுபட்டனர். கடந்தாண்டு இதே விற்பனையின் போது, காலை, 10:00 மணி வரை கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்து, போலீசார் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்தனர்.