ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தளவாட பொருட்கள் அனுப்பும் பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தளவாட பொருட்கள் அனுப்பும் பணி
ADDED : ஏப் 23, 2026 04:22 AM

ஈரோடு:தமிழகத்தில்
சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில்
காங்., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் உட்பட மொத்தம், 20
வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் ஒரு ஓட்டுச்சாவடிக்கு
இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதன்படி, 310 கன்ட்ரோல் யூனிட், 620 பேலட் யூனிட், 336 வி.வி.பேட் தயார்
நிலையில் உள்ளன.
மாற்றுத்திறனாளி வாக்காளர்ளுக்காக வீல்சேர்,
பேனா, மை உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் என அனைத்து தளவாட பொருட்கள்
அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.
முன்னதாக ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்க் அறை, வேட்பாளர்களின்
முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. பின்னர் அனைத்து பொருட்களும்
ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஏற்றபட்டு, துப்பாக்கி
ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு
அனுப்பப்பட்டன.
இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி,
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித்ஜெயின், தேர்தல்
பொது பார்வையாளர் மினிஸ்தி ஆகியோர்
பார்வையிட்டனர்.
