/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் வளாகத்தில் தி.மு.க., கொடியால் அதிருப்தி
/
கோவில் வளாகத்தில் தி.மு.க., கொடியால் அதிருப்தி
ADDED : செப் 21, 2024 07:23 AM
ஈரோடு: சித்தோட்டில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்-ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தரிசனம் செய்ய, பக்-தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். கோவிலை சுற்றியும், தி.மு.க., கட்சிக்கொடி நட்டு வைக்கப்பட்டிருந்தது. சுவாமி சிலை அருகிலும் கொடி வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து பா.ஜ.,வினர் கூறியதாவது:
சித்தோடு மாகாளி-யம்மன் கோவில் மற்றும் எதிரேயுள்ள விநாயகர் கோவிலை சுற்றி, ௨0க்கும் மேற்பட்ட தி.மு.க., கொடி நடப்பட்டுள்ளது. கொடி வைக்க அனுமதி வழங்கிய போலீசார், மாநகராட்சி மற்றும் வி.ஏ.ஓ., என அனைத்து தரப்பினரும், பா.ஜ., கொடியை வைக்கவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.