sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை

திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை

திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை


ADDED : மார் 02, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, ஈரோடு மாவட்ட நிர்-வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக கிராமங்களின் துாய்மையை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்-பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 ஊராட்சிகளில், தலா ஒரு இடத்தில் மண்புழு உரக்கூடம், குப்பையை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெருவாரி-யான இடங்களில் இவை செயல்படாமல் மதுப்பி-ரியர் கூடாரமாகவும், காட்சி பொருளாகவும் மாறியிருக்கின்றன. பல இடங்களில் முழுவதும் சிதைந்து போயிருக்கின்றன. குப்பைகளை சேக-ரித்து செல்லும் துாய்மை காவலர்கள் தரம் பிரிக்-காமல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கொட்டி எரித்து விடுகின்றனர். மக்கும் குப்பை மூலம் மண்புழு உரம் தயாரித்தல், மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்புவது கேள்விக்குறியாகி வருகிறது, இதுபற்றி புகார் எழுந்த வண்ணம் உள்-ளது. இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் திடக்க-ழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் சூர்யா கூறியதாவது: ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை உரக்கிடங்கிலும், மக்காத குப்பை கிடங்குகளிலும் சேகரிக்கப்பட்டு, சிமெண்ட் தயா-ரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் குப்பை தீ வைத்து எரிக்கப்படுவ-தாக புகார் உள்ளது. எனவே ஊராட்சிகளில் திடக்

கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us