/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட தலைவர் தேர்வு விண்ணப்பம் மேலிட காங்., பார்வையாளர் சேகரிப்பு
/
மாவட்ட தலைவர் தேர்வு விண்ணப்பம் மேலிட காங்., பார்வையாளர் சேகரிப்பு
மாவட்ட தலைவர் தேர்வு விண்ணப்பம் மேலிட காங்., பார்வையாளர் சேகரிப்பு
மாவட்ட தலைவர் தேர்வு விண்ணப்பம் மேலிட காங்., பார்வையாளர் சேகரிப்பு
ADDED : நவ 25, 2025 01:49 AM
ஈரோடு ;தமிழக காங்., கட்சியில் மாவட்ட தலைவர் நியமனம் தொடர்பாக மேலிட பார்வையாளர் நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று, மாவட்ட தலைவர் பதவிக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று, அவர்களது செயல்பாடு, மாவட்டத்தில் கட்சி செயல்பாடு குறித்த கருத்துக்களை சேகரிக்கின்றனர். அவற்றை கட்சி தலைமைக்கு அனுப்பி, மாவட்ட தலைவர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஈரோடு மாவட்டத்துக்கு தேசிய காங்., மேலிட பார்வையாளராக ஜே.ஆர்.லோபோ, மாநில காங்., மேலிட பார்வையாளர்கள் விவேக் லஜபதி, சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கல் ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகம் வந்தனர். அங்கு மேலிட பார்வையாளர் லோபோ, நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட தலைவர்கள் தேர்வுக்காக வந்துள்ளோம். அடுத்த, 5 நாட்கள் மாவட்ட வாரியாக சென்று, மனுக்கள், கருத்துக்கள் பெற்று தலைமையிடம் அறிக்கை தாக்கல் செய்கிறோம். பரிசீலனைக்கு பின் மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படுவர்.
தேசிய அளவில் எம்.பி., ராகுல் கட்சியை பலப்படுத்தி, வியூகங்களை வகுக்கிறார். மாவட்ட அளவில் கட்சியை ஒருங்கிணைக்க மாவட்ட தலைவர், அவரது கீழ் உள்ள நிர்வாகிகள் நியமிக்கப்படும்போது, புத்துயிர் பெறும். வேறு அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. இவ்வாறு கூறினர்.
மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் பொறுப்புக்கான விண்ணப்பம் பெறப்பட்டதுடன், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடந்தது.

